திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச போக்குவரத்து தொடக்கம் : துரை வைகோ எம்.பி. தகவல்

0 159
Stalin trichy visit

திருச்சி, நவ.1 திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit  (சர்வதேச போக்குவரத்து) வசதி மீண்டும் பெறப்பட்டது.

இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்திருப்பதாவது,  சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, அபுதாபி, தம்மாம், தோஹா மற்றும் குவைத் போன்ற இடங்களுக்கு நேரடி இணைப்பு வசதியுடன், திருச்சி விமான நிலையம் தென்னிந்தியாவில் ஒரு முக்கிய International-to-International transit மையமாக செயல்படுவதற்கு தனித்துவமான புவி அமைப்பில் இடம் பெற்றுள்ளதையும், திருச்சி புதிய ஒருங்கிணைந்த முனையம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது எனவும், பழைய முனையத்தில் 2024 ஜூன் மாதம் நிறுத்தப்பட்ட International-to-International transit வசதியை மீண்டும் அமல்படுத்துவது, பயணிகளுக்கு வசதியை பெருமளவில் மேம்படுத்துவதோடு, இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டு மாண்புமிகு விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை அவரது அலுவலகத்தில் 19.08.2025 அன்று சந்தித்து, திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று மேற்கண்ட காரணங்களை சுட்டிகாட்டி உரிய தரவுகளுடன் கோரிக்கை வைத்தேன்.

மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் எடுத்துரைத்தேன்.

என் கோரிக்கையை ஏற்று Air India Express சேவை மூலம் துபாய், அபுதாபி, சார்ஜா, மஸ்கட் ஆகிய இடங்களிலிருத்து திருச்சி வழியாக சிங்கப்பூர் செல்லும் வசதியை விமான போக்குவரத்து துறை அறிவித்திருப்பது விமான பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் இருக்கும் இவ்வசதி இரண்டாம் கட்ட நகரங்களில் திருச்சியில் மட்டுமே இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு, திருச்சி விமான நிலையம் Transit Hub என்ற நிலையை எட்டியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

விமான நிறுவனங்களின் பங்களிப்பு விகிதத்தை மேம்படுத்தவும், விமான நிலையத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படவும், ஏற்றுமதியை விரிவுபடுத்தவும், சர்வதேச இடங்களுக்கு இடையே திருச்சி வழியாக தடையின்றி பயனிப்பதற்கும் இவ்வசதி பெரும் பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

International-to-International transit வசதி எளிதான கோரிக்கை அல்ல, ஆனாலும் விரைவாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று விமான நிலைய அதிகாரிகள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி வழியாக சிங்கப்பூர் செல்லும் வசதியை இன்டிகோ விமான சேவை விரைவில் தொடங்க இருக்கிறது என்பதையும் தெரிவித்திருக்கின்றனர்.
ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர்  ராம்மோகன் நாயுடுக்கும், விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கும் என் மகிழ்வான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.