அன்புக்கரங்கள் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, செப்.15 சென்னை கலைவாணர் அரங்கில் சமூகநலன் மற்றம் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பெற்றோரை இழந்து உறவினர் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதாரத் தேவைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை திட்டத்திற்கான அடையாள அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி (எ) கவிஞர் சல்மா, சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மண்டல குழுத் தலைவர் மதிவாணன், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் செல்வேந்திரன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.