மகாவிஷ்ணு மஹா பொய்யர் – திருச்சி எம்பி துரை வைகோ பேட்டி

0 227
Stalin trichy visit

திருச்சி, செப். 7  திருச்சி எம் பி யும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துறை வைகோ திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

திருச்சி விமான நிலைய மேம்பாடு குறித்தான ஆய்வு கூட்டம் விமான நிலைய அதிகாரிகளுடன் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நான் முழுமையாக விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

திருச்சியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டாலும் அதிக அளவில் விமான சேவைகள் இயக்கப்பட முடியவில்லை அதற்கு காரணம் போதிய அளவிலான ஓடுதள பாதை இல்லை ஓடுதள பாதையை அமைப்பதற்கான நில எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சி விமான நிலைய
ஓடுதள விரிவாக்கத்திற்கு 95 சதவீத நில எடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 155 ஏக்கர் நிலத்தை ஓடு தள விரிவாக்கத்திற்கு அவர்கள் தருவதாக ஏற்கனவே கூறிவிட்டனர். மீதமுள்ள நிலத்தை கையகப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன குறிப்பாக விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்படுத்தும் பாதை அதிக அளவில் உள்ளது. அதனால் அவற்றை கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. விரைவாக அதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும்.

கார்கோ விமான சேவையில் போதிய வசதிகள் இல்லாததால் கார்கோ சேவை குறைந்துள்ளது
விவசாய பொருட்கள், பூக்கள் போன்றவை அழியும் பொருட்களாக உள்ளதால் அவற்றை பாதுகாப்பதற்கு போதிய வசதி இல்லை. அதனால் அவற்றை அனுப்ப வியாபாரிகள் தயங்குகின்றனர். எனவே கார்கோவிற்கு விமான சேவை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

விமான நிலையத்தில் அதிக அளவு கவுண்டர்கள் இருந்தாலும் அதிகாரிகள் குறைவாக இருப்பதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய நிலை இருக்கிறது எனவே கூடுதலாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.

திருச்சி விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு தனி இடம் உள்ளது . வருகை புரிபவர்கள் தொழுகை நடத்த தனி இடம் ஏற்படுத்தி தர வேண்டும் என கூறினேன் உரிய ஏற்பாடு செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் பல்வேறு உலகத் தரம் வாய்ந்த தனியார் மருத்துவமனைகள் உள்ளது. எனவே மெடிக்கல் டூரிசம் ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து விமான துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.  பொது துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்தால் பொது நலன் என்கிற நோக்கத்தையே இழந்து விடுவோம்

திருச்சி விமான நிலைய பழைய முனையத்தை என்ன செய்வது என்கிற திட்டமிடல் அதிகாரிகளிடம் இல்லை. அடுத்த முறை அவர்களை சந்திக்கும் பொழுது அது குறித்து விவாதிப்பேன்.

வக்பு சட்டத் திருத்தம் என்பது தேவையில்லாத ஒன்று. நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை திசைதிருப்ப இது போன்ற பிரச்சனைகளை ஒன்றிய அரசு கையில் எடுக்கிறார்கள்.

ஆன்மிகம் என்பது வேறு, சனாதனம் என்பது வேறு. மகாவிஷ்ணு பேசியது சனாதான பேச்சு தான். மகாவிஷ்ணு மஹா பொய்யர். இந்து மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் அற்பன் தான் மகாவிஷ்ணு. இந்த விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை குறை கூற தேவையில்லை.  அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.   நான் பார்த்ததிலேயே பள்ளிக்கல்வித்துறையில் சிறந்த அமைச்சராக அவர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.