தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது

0 275
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 24  திருவெறும்பூர் கடைவீதியில் உள்ள கடைகளுக்கு குட்கா பான் மசாலா சப்ளை செய்த வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்து 70 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல் செய்துள்ளனர்.

திருவெறும்பூர் கடைவீதியில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்த பொழுது கடைக்கு கடை சென்று பொருள்களை விநியோகம் செய்பவர் என்று தெரியவந்தது மேலும் அவர் வைத்திருந்த பொருட்களை சோதனை இட்ட பொழுது அதில் ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காப்பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரித்த பொழுது அவர் திருவெறும்பூர் அருகே உள்ள முருக்கூரை சேர்ந்த முகமது பாஷா மகன் இம்ரான் (28 )என்றும் மேலும் அவரிடம் விசாரணை செய்ததோடு அவரது வீட்டை சோதனை செய்த பொழுது வீட்டிலிருந்து ஹான்ஸ் விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதன் எடை சுமார் 70 கிலோ ஆகும் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இம்ரானை கைது செய்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.