மாணவர்களுக்கு இடையூறாக இருந்த தேன்கூட்டை அகற்றி தீயணைப்புத்துறையினர்

0 194
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 24  திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளி விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு இடையூறாக இருந்த தேன்கூட்டை திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் நேற்று அளித்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் அரசு மாதிரி பள்ளிசெயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் விடுதியில் மூன்றாவது மாடி ஜன்னல் அருகே தேன்கூடு இருந்து வந்ததோடு தேனீக்கள் அடிக்கடி பறந்து மாணவர்களுக்கு பெரும் தொல்லையை கொடுத்து வந்தது. இதனைத் தொடர்ந்து இது சம்பந்தமாக மாணவர்கள் சென்னை மார்டன் கண்ட்ரோலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்கள் விடுதியில் மூன்றாவது மாடியில் கட்டி இருந்தேன் கோட்டை தீப்பந்தம் கொண்டு அளித்தனர் இதனால் மாணவர்கள் நிம்மதிஅடைந்தனர்

Leave A Reply

Your email address will not be published.