அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு: காவல்துறையினர் விசாரணை

0 241
Stalin trichy visit

திருச்சி, மே 9  திருச்சி மாவட்டம் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் எந்த காயங்களும் இன்றி சடலமாக கிடப்பதாக ச.கண்ணனூர் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜீக்கு பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று சடலமாக கிடந்த முதியவர் குறித்து விசாரணை செய்தார்.ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை.

இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் தகவல் கொடுத்தார்.
தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்,எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.