திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கடைவீதியில் பகுதியில் வீட்டின் மாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவெள்ளறை கடை வீதியை சேர்ந்தவர் நடராஜன்.இவரது மனைவி 45 வயதான சுமதி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் தனது வீட்டிலுள்ள மாடியில் உள்ள வராண்டாவில் செல்போனில் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை மர்ம நபர் பறித்துச் சென்றார்.இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து செய்த போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையில் போலீசார் திருவெள்ளறை கடைவீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவெள்ளறை கடைவீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நின்றுகொண்டு நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரனையில் கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை, எட்டிமடை, சின்னையன் கவுண்டன்புதூர் திருவிக தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் 25 வயதான நவீன் குமார் செல்போன் பேசிக் கொண்டிருந்த சுமதியிடம் 6 பவுன் தாலி செயினை பறித்தது தெரியவந்தது.பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்து திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.