குடிநீர் மோட்டார் காப்பர் கம்பிகளை திருடியவர் கைது

0 287
Stalin trichy visit

திருச்சி, பிப்.2 திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் திருத்திய மலை கிராமத்தில் குடிநீருக்காக கிணற்றில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் திருட்டு போனது. இதுகுறித்து ஊராட்சி செயலர் சந்தியா ( 28 ), முசிறி காவல் நிலையத்தில் முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் முசிறி காவல் உதவி ஆய்வாளர் சேகர் திருத்தியமலை பகுதியில் விசாரணை செய்தார். அப்போது விசாரணையில் கரியமாணிக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரவிக்குமார் ( 23 ) என்பவர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ4,500 மதிப்புள்ள காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் காப்பர் கம்பிகளை திருடிய ரவிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.