போலி பாஸ்போர்ட்டில் பயணித்தவர் கைது
திருச்சி, ஆக.3 நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது57), இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு இமிகிரேஷன் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் மனைவி பெயர், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது. தெரிந்தது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து முருகையனை கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.