வீட்டிலிருந்து வெளியே சென்ற வாலிபர் திடீரென மாயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்றுமங்கலத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற வாலிபர் திடீரென மாயமானார்.
லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தைச் சேர்ந்தவர் எலியாஸ். இவருடைய மகன் 29 வயதான யோவான்.இவர் எலக்ட்ரீசியன் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனர். இவருடைய தந்தை காலமாகிவிட்ட நிலையில் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமானார். இவருடைய குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் அக்கம்பக்கம் பகுதிகளில் தேடி வந்தனர். ஆனாலும் வாலிபர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவரை யாரேனும் கண்டால் 88 38 22 04 61 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.