மணப்பாறை சந்தை களைகட்டியது: ரூ. 9 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை

0 120
Stalin trichy visit

திருச்சி , செப்.10- மணப்பாறை சந்தையில் நேற்று ரூ.9 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை யாகின.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆடு, மாட்டுச் சந்தை உள்ளது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நடைபெறும். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடு, மாடுகளை விற்பனைக்காக கொண்டு செல்வார்கள்.

அதன்படி இந்த வாரம் நேற்று சந்தை நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான ஆடு, மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதனை வாங்க விவசாயிகளும், வியாபாரிகளும் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு வாங்கியதால் விற்பனை களைட்டியது.

சந்தை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ரூ.9 கோடிக்கு மேல் ஆடு, மாடுகள் விற்பனையாகின. ஆடு, மாடுகளின் விலையும் சராசரியாகவே இருந்தது. வழக்கமாக மணப்பாறை கால்நடை சந்தையில் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை ஆடு, மாடுகள் விற்பனை நடைபெறும். ஆனால் இந்த வாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும். இதனால் நேற்று நடந்த சந்தையில் ரூ.9 கோடிக்கு மேல் ஆடு, மாடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக ஒப்பந்ததாரர்கள் சந்தைதோறும் கட்டண வசூலில் ஈடுபடுவார்கள். தற்பொழுது ஒப்பந்த காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சந்தையில் நகராட்சி நிர்வாகமே நேரடி கட்டண வசூல் செய்கிறது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.