திருமணமான பெண் திடீர் மாயம்
திருச்சி ஜூன் 27- திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவர் உடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சமீபகாலமாக அவரது மனைவி இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத வாலிபரிடம் ஒரு வருடமாக பேசி வந்தாக தெரிகிறது.இதை அறிந்த அவரது கணவன் முருகன் மனைவியை கண்டித்தார்.
இந்த நிலையில் கடந்த 22ந் தேதி திடீரென செல்வி வீட்டிலிருந்து மாயமானார். இதையடுத்து முருகன் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதா கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வியை தேடி வருகிறார்.