கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, ஜுன் 21 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் மகள் இறந்த விட்டதால் மன உளைச்சலில் இருந்த கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான செல்வன்.இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 10 வருடத்திற்கு முன்பு இவரது மகள் பாக்யலட்சுமி இறந்து விட்டார். அதிலிருந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.