அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

0 260
Stalin trichy visit

ரவுண்டானாவில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ,கொலை, கொள்ளை,வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ,கொலை, கொள்ளை,வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்குடி ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப. குமார் கண்டன உரையாற்றினார்.
.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி ஒன்றிய நகர பகுதி, கிளைக் கழக செயலாளர்கள், தகவல் தொழில் நுட்ப அணியினர், செயல்வீரர்கள், வீராணங்கனைகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ,அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.