அன்பில் அறக்கட்டளை – அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்
திருச்சி, செப்.8 திருவெறும்பூர் தொகுதியில் துவாக்குடி நகராட்சி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து நடைபெறும் மாபெரும் இலவச மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
திருவெறும்பூர் துவாக்குடி சமுதாய நலக் கூடத்தில் நேற்று நடைபெற்ற இம்முகாமில் துவாக்குடி நகராட்சி மக்கள் பங்கேற்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து கொண்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்றனர்.
முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது இந்நிகழ்வில் துவாக்குடி நகர மன்ற தலைவர் காயம்பு மருத்துவர்கள் சுரேஷ், தமிழரசன், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.