திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை
திருச்சி புத்தூர் கிளை நூலகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி கிங்ஸ்லி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத்தலைவர் விஜயகுமார், பள்ளி துணை முதல்வர் ஆரோக்கியமேரி, தமிழ் பாட ஆசிரியர் இராச. இளங்கோவன், முன்னிலையில் புத்தூர் கிளை நூலகர் புகழேந்தியிடம்
114 பள்ளி மாணவ, மாணவிகளை நூலக உறுப்பினராக சேர்த்தார்.