மனநலம் பாதித்த வாலிபர் மாயம்

https://trichymail.com/?p=34841&preview=true

0 370
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல வங்காரத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற வாலிபர் திடீரென மாயமானார். தேடும் பணிகள் தீவிரம்.

மண்ணச்சநல்லூர் அருகே மேலவங்காரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் இவருடைய மனைவி ராஜம். இந்த தம்பதிகளின் மகன் அய்னன்(30). இவருக்கு சிறு வயது முதலே மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற அய்னன் பின்னர் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் வாலிபர் கிடைக்கவில்லை.

இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மயமான வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.