ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0 321
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் தமாக தலைவர் ஜிகே வாசன் 58 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினார்.

திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கே வி ஜி ரவீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் டி ஆர் தர்மராஜ் ஆகியோரின் ஆணைக்கிணங்க புள்ளம்பாடியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டாரத் தலைவரும் சரடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருமான ராஜமாணிக்கம், மேற்கு வட்டாரத் தலைவர் செல்வகுமார், மாவட்ட துணை தலைவர் ஜே பி ஆர் சிவப்பிரகாசம், மாவட்ட இளைஞரணி செயலாளரும் கண்ணாகுடி ஊராட்சி மன்ற தலைவருமான சுகன்,புள்ளம்பாடி வார்டு கவுன்சிலர் திருநாவுக்கரசு புள்ளம்பாடி நகர தலைவர் தனராஜ், விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.