போர்டாக்ஸ் கலவை செய்யும் முறை – வேளாண் மாணவர் விளக்கம்

0 528
Stalin trichy visit

போர்டாக்ஸ் கலவை – செய்யும் முறை
அறிமுகம்:
•    பயிர்களை விளைவிக்கும் பொழுது,அதுவும் குறிப்பாக பழ வள பயிர்களை நாம்-
•    விளைவிக்கும் பொழுது, அதிக இறப்பதம் காரணமாக புஞ்சை தாக்கம்- (கீழதுக்கு மற்றும் மேலடுக்கு நோய்கள )ஏற்பட்டு பழத்தையும்,மகசூலையும் பாதிக்க செய்யும்.
•    அது மட்டுமின்றி மிகவும் முக்கியமான நோய்களான ஆப்பிள் பைர் பிலைட், டவுட்னி மில்டவ் மற்றும் பவுடரி மில்டவ் நோய்களை கொய்யாயப்பழம், சப்போட்டா போன்ற செடிகளில் ஏற்படுத்தி பாதிப்புகளை உண்டாக்கியதால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி. எம். மில்லார்டட் 1885 ஆம் ஆண்டு போர்டாகஸ் கலவையை கண்டுபிடித்தார்.
செய்யும் முறை மற்றும் தேவையான பொருட்கள்:
இது ஒரு செயற்கை நோய் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் இதுவே உலகின் பல இடங்களில் புஞ்சை நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்திகொண்டிருக்கும்
எளிய நோய் தடுப்பு முறையாகும். இதை செய்வதற்கு மூன்று பொருட்கள் தேவைப்படும்-
1. காப்பர் சல்பேட் (CuSO4) 400 கிராம்
2. சுண்ணாம்பு  (CaCo3) 400 gram
3. தண்ணீர் (சுமார் 40 லிட்டர் )
குறிப்பு: இது ஒரு ஹெக்டர் (1 Hectare) அளவிற்கன கணக்கு ஆகும்.
*தேவைக்கேற்ப குறைவாகவோ, அதிகமாகவோ (CuS04:CaCo3:H20  தண்ணீர் ) இவற்றை 1:1:100 என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தி  கொள்ளலாம்.

செய்முறை:
1). 400 கிராம் காப்பர் சல்பேட்யை 20 லிட்டர் தண்ணீரில் தனியாக ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலக்கவும்.
2). அதேபோல், 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் தண்ணீரில் தனியான பாத்திரத்தில் கலந்து கொள்ளவும்.
3).  இறுதியாக, கலந்து வைத்த இரு கலவைகளையும் ஒன்றாக கலக்க வேண்டும். முதலில் சுண்ணாம்பு கலவையை  ஊற்றி பின்பே காப்பர் சல்பேட் கலவையை சேர்க்க வேண்டும். பின்பு, அதனை நன்றாக கலந்தால் ஏலகு நீல (Light Blue) வண்ணமுள்ள போர்டாகஸ் கலவை தயாராகிவிடும்.
உபயோகிக்கும் முறைகள்:
•            செய்த கலவையை : 20 வாட்ஸ் பேட்டரி ஸ்பிரேயர், கனாப்சக் ஸ்பிரேயர் போன்ற ஸ்பிரேயர்களில் நிரப்பி கொண்டு நாம் பயன்படுத்தலாம்.
•    பின்பு, மரத்தின் மீது (Direct Spray) (அல்லது), இலை   மீது(Foliar Spray) செய்ய வேண்டும். அப்போது தான் நோய்யின் தாக்கம் குறையும். நேரடியாக மரத்தின் மீது பயன்படுத்த கூடாது.
பயன்கள்:
1). பழ வகை  பயிர்களில் பயன்படுத்தினால் மகசூல் அதிகரித்து
உயர் தர பழவகைகளை நோய் தக்கமின்றி பெறலாம்.
2). பிற கெமிக்கல் ராசாயான கலவைகளை காட்டிலும் குறைந்த செலவில் தாமகவே செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
3).போர்டாக்ஸ் என்னும் இக் கலவையினை  நாம் பேஸ்ட்,பெயிண்ட்,கலவையாகவும் பயன்படுத்தலாம்.

தீமைகள் மற்றும் இன்றிமையாமை :
1).மேல் குறிப்பிட்டதுபோல், இது ஒரு செயற்கை நோய் தடுப்பு முறைகளில் ஒன்றாகும். காப்பர் சல்பேட் போன்ற மனிதர்களுக்கு தீங்கு விலைவிக்க கூடிய நச்சு வேதியியல் பொருட்கள் இருப்பதால் நன்கு ஆராய்ந்து உபயோகித்தால் வேண்டும்.
2). இக்கலவையினை நம் எப்பொழுதும் நடுநிலை தன்மையில் (Neutral Stage)இல் மட்டுமே பயன்படுத்த வேண்டும், இல்லையில் மண் வளத்தையும், நுன்னுயிர் வளத்தையும் பாதிக்கும்.
விற்பனை:
1. இக்கலவையணை நாம் வலைத்தள பக்கங்களில் ஆர்டர் செய்து பெறலாம். (அமேசான், கார்பனோ கார்பொரேட்.)
2.இந்த கலவையினை நாம் அருகில் உள்ள அக்ரோ ட்ரடேர்ஸ் களிடம் அணுகி,நேரடியாகவும் பெறலாம்.
3.அல்லது இதனை நாம் வீட்டிலயே செய்து கொள்ளலாம்.காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பை, தண்ணீரில் மேற்குரியவாரு கலந்தால் போர்டாக்ஸ் கலவை தயாராகிவிடும்.
மேலும் விவரங்களுக்கு, அணுகவும் :
பா. நவீன்குமார்,இறுதியாண்டு வேளாண் மாணவன்.
மின்னஞ்சல் : naveenkumaras1234@gmail.com
முனைவர் பா. குணா, இணைபேராசிரியர்,வேளாண் விரிவாக்கதுறை, நலந்தா வேளாண்மை கல்லூரி, திருச்சி.
மின்னஞ்சல்:baluguna8789@gmail. com
தொலைபேசி எண் :+919944641459
போர்டாக்ஸ் கலவை

Leave A Reply

Your email address will not be published.