தமிழ்நாடு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று திருச்சி மாணவி சாதனை

0 89
Stalin trichy visit

திருச்சி, ஜன.19  ஜன.4 ஆம் தேதி  43-ஆவது தமிழ்நாடு கராத்தே சாம்பியன்ஷிப் சென்னையில் உள்ள சாந்தோம் மான்ஃபோர்ட் பள்ளி உள் விளையாட்டு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலிருந்தும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினர்  தொல். திருமாவளவன் எம்பி மற்றும் மயிலாப்பூர் எம்எல்ஏ  வேலு ஆகியோர் கலந்து வருகை புரிந்தனர். இப்போட்டியில் சுமார் 1000 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இவருடைய பிரிவில் 60 மாணவிகள் கலந்து கலந்து கொண்டனர். இப்போட்டியில் 54 கிலோ எடை பிரிவில் போட்டியில் திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளி மாணவி எஸ்.கமலயாழினி வெண்கல பதக்கம் வென்று திருச்சி பெருமை சேர்த்தார்.
இதனை அறிந்த பள்ளி முதல்வர், இவருடைய கராத்தே பயிற்சியாளர் மாஸ்டர் R. சுதாகர், மாணவர்கள், மாணவியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.