சமத்துவ பொங்கல் விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு

0 312
Stalin trichy visit

திருச்சி, ஜன.13 தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் திருவெறும்பூர் குதியில் அமைந்துள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் சமத்துவ பொங்கல் வைத்து பொது மக்களுக்கு பொங்கல் வழங்கியதுடன், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு அப்பகுதியில் உள்ள ஐங்கரன் கலைக்கூடத்தை சேர்ந்த சிலம்ப மாணவ மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 ஆவது வார்டு நியாயவிலை கடை பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அப்பகுதியில் உள்ள 1365 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை (இலவச வேட்டி சேலை, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம்) பொதுமக்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் நீலமேகம் திருச்சி மாநகராட்சி 36ஆவது வார்டு மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக், கூட்டுறவு சங்க இணைபதிவாளர் ஜெயராமன், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் குணசேகரன், கூட்டுறவு சார்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் சகிப்புல்லா, அமராவதி மேலாளர் கபிலன் மற்றும் அரசு அதிகாரிகள் , வட்ட செயலாளர்கள் ஆனந்த், சுரேஷ் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வினோத் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.