1443 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகள் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
திருச்சி, ஆக 22 தமிழ்நாடு அரசு சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தேனீர் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், சோழமாதேவி ஆதிதிராவிடர் நல்ல மேல்நிலைப்பள்ளி, பாய்லர் பிளாண்ட் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், துவாக்குடியில் உள்ள குழந்தை இயேசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 10 பள்ளிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் 478 மாணவர்களுக்கும், 965 மாணவிகள் உள்பட 1443 மாணவ மாணவிகளுக்கு பெல் வளாகத்தில் உள்ள பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச மிதிவண்டி வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. ரூ 72 லட்சத்து 90 ஆயிரத்து 930 மதிப்பு உடைய ஆயிரத்து 1443 இலவச மிதிவண்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசும் போது,
திமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிகளவு திட்டங்களை கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பட்டப்படிப்பு,பட்டையப் படிப்பின் போது இடைநிற்றல் இல்லாமல் இருப்பதற்காக மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு தான் நடைமுறைப்படுத்தவுள்ளது. மேலும் பெண்கள் எடுக்கும் முடிவு யாரும் பாதிப்பு இல்லாத வகையில் இருக்கும், மாணவர்கள் சமூதாய முன்னேற்றத்திற்கு பாடுபடுவார்கள். தமிழ்நாடு முதல்வரின் நான் முதல்வன் கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும். மேலும் நமது முதலமைச்சர் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்களை படிப்பு, படிப்பு, படிப்பு என கூறுவார். மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பாதி ஆசிரியர் என்றும் அதேபோல் ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும் மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்து விளங்குவதற்காக தான் ஆசிரியர்கள் கண்டிப்பார்கள் அதனை பெரிது படுத்த கூடாது என்றார்.
இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கருணாநிதி, கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் தங்கவேல், தலைவர் செல்வராஜ், துவாக்குடி நகர செயலாளரும் தலைவருமான காயாம்பு, பேரூர் கழக துணை தலைவர் பழனியாண்டி, பெல் தொமு தொழிற்சங்க பொதுச் செயலாளர் கணேசஸ்குமார் உட்பட அரசு அதிகாரிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்புரையாற்றினார். நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா நன்றி கூறினார்.