ரூ. 4.10 இலட்சம் மதிப்பில் ஆஞ்நேயர் கோவில் மராமத்து பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 225
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர்

திருவெறும்பூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் 4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் மராமத்து பணிகள் மேற்கொள்ள உள்ளதற்கான பணியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது.

இதனால் நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து மிகவும் மோசமாக உள்ளது. அதனால் அதனை புதுப்பித்து தர வேண்டுமென பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு ஆஞ்சநேயர் கோயில் பரமறிப்பிற்காக ரூபாய் 4 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கி தந்தது அதன் அடிப்படையில் பணிகள் தொடங்குவற்கு உரிய விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செந்தில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் .

இந்த விழாவில் முன்னாள் எம்எல்ஏ சேகரன், மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கருணாநிதி, மாமன்ற உறுப்பினர் சிவா மலை கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.