புதிய பள்ளிக் கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

0 368
Stalin trichy visit

திருச்சி, நவ. 17 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வேங்கூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடுநிலைப் பள்ளியை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மேலும் அதே பள்ளிவாளகத்தில் ரூ.2.47 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், உதவி இயக்குந ஊராட்சி கங்காதரணி, திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிஷன்சிங், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மாவட்ட கவுன்சிலர் கே.எஸ்.எம். கருணாநிதி ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.