“தம்பி அருமை அருமை அருமை” – மானிய கோரிக்கை விவாதத்தில் கலக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
கரஸ்பாண்டன்ட் ஆக சபாநாயகர் இயக்க ஹெச்.எம்- மாக முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் இருந்து வழிநடத்துகிறார் என நேற்று நடந்த பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலகலவென்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது அனைவரையும் கவர செய்தது.

ஆம், தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற இருந்த நிலையில் அதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவையின் கூடியது, அங்கு இளம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்-ன் பேச்சால், பலரும் வியப்புக் உள்ளாகினர்.
ஒரு மாணவரால் மட்டுமே மாணவர்களை புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு ஏற்றவாறே மாணவரின் மனநிலையையும் அரங்கத்தில் அரங்கேற்றியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.தொடர்ந்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நியாயத்திற்கு மட்டும் கோபப்படும் ஆங்கிரி பேர்ட் (Angry bird) எனக் குறிப்பிடுவோம் என்று அன்பில் மகேஷ் தெரிவித்தபோது அவையில் சிரிப்பலை உண்டானது.

அன்பில் மகேஷ் பேசுகையில், பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.32,599.54 கோடி தொகை மக்களின் வரிப்பணம் எனவும், அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியதாவும் கூறினார்.
கற்றல்திறனை அதிகரித்து இடைநிற்றலை குறைப்பது முக்கிய பணியாக மேற்கொள்ள உள்ளோம். மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் எடுத்தாலும், கற்றல்திறனில் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். கற்றல்திறனில் நாட்டிலேயே 23வது மாநிலமாக நாம் இருக்கிறோம், 10 இடத்திற்குள் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். கற்றல்திறனை அதிகரிக்க ரூ.213.6 கோடி நிதியில் கற்றல் கற்பித்தல் இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டில் இந்தத் துறைக்கு 9 அமைச்சர்கள் மாற்றப்பட்டு, Musical chair போல விளையாடியிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 65 லட்சம் விலையில்லா புத்தகப்பைகளில் முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்ட போது, 13 கோடி ரூபாய் செலவில் அதனை மாற்றலாம் என கூறினோம். இது மக்களின் வரிப்பணம், 13 கோடி ரூபாய் இருந்தால் அதை பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேறு திட்டம் செயல்படுத்துவேன். அந்த புத்தகப்பையில் அவர்களின் படமே இருந்துவிட்டுப் போகட்டும், என பெருந்தன்மையுடன் பேசியதை விட்டுக்கொடுத்ததாக கூறினார்.
தொடர்ந்து மானியக் கோரிக்கையில் அமைச்சர் அறிவித்தலை
திசைதோறும் திராவிடம்
திராவிட மொழிகளிலேயே தொன்மைமிக்க மொழியான தமிழின் வரலாறு, பண்பாடு மரபு மற்றும் தமிழ் சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் நூல்கள் பொண்ணியின் செல்வன், வைக்கம் போராட்டம் ஆகிய நூல்கள் மலையாளத்திலும், திருக்குறளுக்கு கலைஞர் உரை தெலுங்கிலும், தி.ஜானகிராமன் சிறுகதைகள் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில மொழிப் பதிப்பகங்களோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கூட்டு வெளியீடுகளாக கொண்டுவரப்படும் இதேபோல் பிற திராவிட மொழிகளில் இருந்து சிறந்த நூல்கள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும்.
முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்!
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், வேளாண்மை போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள தலைசிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து சம்பந்தப்பட்ட பதிப்பகங்களோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் 2 கோடி செலவில் வெளியிடப்படும்.
இளந்தளிர் இலக்கிய திட்டம்
குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், நன்னெறிக் கல்வி கற்பிக்கும் மற்றும் அறம் சார் சமூக விழுமியங்களை வளர்த்தெடுக்கவும் இளந்தளிர் இலக்கிய திட்டம் செயல்படுத்தப்படும்.
குழந்தை எழுத்தாளர்களுக்கு “கவிமணி விருது”
குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களை தேர்வுசெய்து 25,000 ரொக்கம் கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும்.
செந்தமிழ் சிற்பிகள் அரங்கம்
தமிழுக்கு அளப்பரிய பங்காற்றி எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களை போற்றும் வகையில் அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாக கொள்ளும் வகையிலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 40 லட்சம் மதிப்பீட்டில் செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம் அமைக்கப்படும்.
உயர்கல்வி தொழில் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டும் ஆலோசனை மையம்
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
பள்ளிகளில் பாரம்பரிய கலைகள்
கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் பண்ணிசை , நாட்டுப் புறப்பாட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்களை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் எடுத்துச் செல்வதை இலக்காக கொண்டு கிராமப்புறங்களில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும்.
விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்
மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பேணும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்படும்.

பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல்
பொது நூலகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேவையான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது பொது மக்களுக்கு தேவையான மிகச் சிறந்த புத்தகங்கள் நாளிதழ்கள் பருவ இதழ்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தற்போதுள்ள புத்தகங்களுக்கான கொள்முதல் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு விருது
கிராமப்புறங்களை சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் சிறந்த கல்வி சேவையாற்றி வருகின்றன பள்ளிகளின் உட்கட்டமைப்பு கல்வி தரம் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு என ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான சிறந்த முறையில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம், கஸ்தூரிபா காந்தி பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிகளைத் தரம் உயர்த்துதல், மின்னணு சேவைகள் மேனிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத் திட்டத்தை சீரமைத்தல், பள்ளி பதிவேடுகள் கணினிமயமாக்கல், பள்ளிகளுக்கு அங்கீகாரம் இணைய வழியில் வழங்குதல், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கொள்கை, கன்னிமாரா பொது நூலகத்தை நவீனப்படுத்துதல், செந்நாப் புலவர் பெயரில் புதிய நூலகம், கிராமப்புற நூலகங்களின் நூலக சேவை, முனைவர் எஸ்.ஆர் அரங்கனின் நினைவு நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நூல்கள் வழங்குதல் என மானியக் கோரிக்கை கொள்கை மாண்புமிகு மாணவர் அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் “தம்பி அருமை அருமை அருமை” என தன் கைப்பட கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்தார்.



திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8