திருச்சி முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜ்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
முசிறி அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பணிபுரியும் அலுவலக பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இன்று (27ம் தேதி), நாளை (28ம் தேதி) ஆகிய 2 நாட்களுக்கு கல்லூரிக்கு வருகை தர வேண்டாம்.
மேலும் முதலாமாண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை நாள் சேர்க்கை குழுவின் தீர்மானத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துறை சார்ந்த ஆசிரியர்கள் துறைத் தலைவரிடம் தகவல்களை பெற்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உடனடியாக செல்போன் மூலம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.