கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை : அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்
திருச்சி, அக்.22 கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையில் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரணத் தொகையை வழங்கிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சி, மேலமுருக்கூர் கிராமத்தை சேர்ந்த மருதமுத்துவின் மகன் சுடர்(52) என்பவரது ஓட்டு வீடானது கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் , வீட்டின் மேற்கூரையானது இடிந்து விழுந்தது.
தகவலறிந்த திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிகல்விததுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டு உடனிருந்த அரசு அதிகாரிகளுக்கு உடனடியாக அவர்களுக்குரிய அடுத்த கட்ட பணிகளை விரைவாக செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார் மற்றும் அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினார்.
இந்நிகழ்வில் திருவெறும்பூர் வட்டாட்சியர் தனலட்சுமி ,கிராம நிர்வாக அலுவலர் பிரபு உடன் இருந்தனர்