பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, ஏப். 26 திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.அந்தப் பேருந்து முனையத்தை வரும் மே 9ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் திறந்து வைக்க உள்ளார். மேலும் அப்பகுதியில் பெரியார் சிலை,அண்ணா சிலை, மற்றும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் கலைஞர் சிலையும் திறந்து வைக்க உள்ளார்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் முடிவற்ற திட்ட பணிகளை தொடக்கி வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சுமார் 55 ஆயிரம் பேருக்கு பட்டக்களை வழங்குகிறார்.
அந்த அரசு விழாவிற்கான ஏற்பாடுகள் பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே நடந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் அரசு விழா நடைபெறும் இடத்தையும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், நகரப் பொறியாளர் சிவபாதம், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்..