முசிறி அருகே கத்திக்குத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி

0 501
Stalin trichy visit

திருச்சி, ஏப்.26  திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் தாலுக்கா அழகரை ஊராட்சி கல்லுப்பட்டி கிராமத்தில் 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் வீண் தகராறு செய்து கத்தியால் குத்திய சம்பவத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் விவசாயி சுப்பிரமணியன் (50) , என்பவர் சம்பவ இடத்திலேயே நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த விவசாயி குமார் (46)சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த சந்துரு (19) தொட்டியம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.திருச்சி போலீஸ் எஸ் பி செல்வ நாகரத்தினம் முத்தரவின் பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி மற்றும் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் ஆகியோர் தீவிர விசாரணை. சம்பவத்தில் தொடர்புடைய சரண் (19) மற்றும் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து விசாரணை.

Leave A Reply

Your email address will not be published.