காட்டூரில் திறக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 215
Stalin trichy visit

திருச்சி, ஆக. 9  திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு திருவுருவச்சிலை காட்டூர் ஆயில் மில் செக்போஸ்ட் அருகில் 07.08.24 அன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில்  முதல்வர், கழக தலைவர்
மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இதனை முன்னிட்டு நேற்று கழக முதன்மைச் செயலாளர்  அமைச்சர் கே.என். நேரு கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, மாநகரக்கழக செயலாளர் மு.மதிவாணன், காட்டூர் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர் செந்தில் வட்டக்கழகச் செயலாளர் முருகானந்தம் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.