குடிநீர் தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 346
Stalin trichy visit

திருச்சி, பிப். 27 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் ரூ.23.35 லட்சம் மிதிப்பீட்டில் 10 ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வமுத்துமாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளையும்,பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் அமைக்கப்டுள்ள அங்கன்வாடி மய்யக் கட்டிடத்தையும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் நகர பொறியாளர் சிவபாதம்,முக்கிய பிரமுகர் வைரமணி, மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.