முதலமைச்சரிடம் பாராட்டு பெற்ற முசிறி டி.எஸ்.பிக்கு எம்.எல்.ஏ.நேரில் வாழ்த்து
முசிறி போலீஸ் பெண் டிஎஸ்பி புகார்கள் மீது விரைந்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமிழக முதல்வர் தொலைபேசி வாயிலாக பாராட்டு தெரிவித்தார் முதல்வரிடம் பாராட்டு பெற்ற டி.எஸ்.பிக்கு தொகுதி எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முசிறி போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றுபவர் யாஸ்மின். இவர் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வர பெற்ற புகார் மனுக்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.
அதாவது 1400 மனுக்கள் உங்கள் தொகுதியில் முதல்வர்
திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டிருந்தது. அதில் 33 மனுக்கள் மட்டுமே விசாரணையில் இருந்தது. எஞ்சிய மனுக்கள் தீர்வு காணப்பட்டது.
இதையடுத்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மினிடம் தொடர்பு கொண்டு பாராட்டினார் .
இதையடுத்து முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று நேரில் சென்று டிஎஸ்பி யாஸ்மினுக்கு சால்வை அணிவித்து தமிழக முதல்வரிடம் பாராட்டு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் சிறப்பாக பணியாற்றுமாறு உற்சாகப்படுத்தினார். வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு டிஎஸ்பி யாஸ்வின் நன்றி தெரிவித்தார். அப்போது தொட்டியம் ஒன்றிய செயலாளர் திருஞானம்,நகராட்சி துணைத் தலைவர் சுரேஷ்,கவுன்சிலர் முகேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.