திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட்ட வழக்குரைஞர்கள்
திருச்சி மத்திய சிறைச்சாலையில் தன் சிறைவாசிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களை தனி அறையில் சந்திக்க அனுமதிக்காமல் பொதுமக்கள் சந்திக்கும் பகுதிகள் சந்தியுங்கள் என்று திருச்சி மத்திய சிறைசாலை நிர்வாகம் கூறுவதை ஏற்க மறுத்து வக்கீல்கள் நேற்று பிற்பகல் சிறை வாசல் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வக்கீல்கள் கூறுகையில், வழக்கு தொடர்பாக சில தகவல்களை கைதிகளிடம் நாங்கள் தனிப்பட்ட முறையில் கேட்க வேண்டும். அதை இன்டர்காமில் பேசினால் அது வழக்கிற்கு பின்னடைவாக அமைந்துவிடும். அவ்வாறு வக்கீல்கள் இன்டர்காம் மூலம்தான் பேச வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தால் அந்த உத்தரவை சிறை அதிகாரிகள் காட்ட வேண்டும் என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளதாக கூறிவிட்டு இரவு 9.45 மணி அளவில் வக்கீல்கள் கலைந்து சென்றனர்.
திருச்சி சிறைச்சாலை வளகத்தில் முற்றுகையிட்டு மதியம் 3
மணி முதல் தற்போது இரவு 10 மணி வரை வரை தொடர்கிறது! போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி வழக்கறிஞர்கள்!
சிறைசாலையில் கைதிகளை தனியாக சந்தித்து பேசுவது ஒவ்வெறு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர்களை கைதிகள் சந்தித்து பேசுவதும் இவர்களின் சட்ட உரிமையாகும்!