குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் பெற்றோருக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

0 405
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கீழபூசாரிபட்டியில் உள்ள பாப்பான் குளத்தில் குளிக்கச் சென்ற அண்ணாவி நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அஸ்வின்ராஜ், முரளி, மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூன்று பேரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது ஆகியோர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். பின்னர் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலரிடம் விரைவாக உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தினர். சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிறிது நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.