பெல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் திருச்சி எம்.பி.யுடன் சந்திப்பு

0 271
Stalin trichy visit

திருச்சி, நவ.28 திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தில்  திருச்சி BHEL ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள்   நேற்று மாலை 6 மணியளவில், திருச்சி எம்.பி. துரை. வைகோவை நேரில் சந்தித்தனர்.

அப்போது, 2014-க்குப் பிறகு ஓய்வு பெற்ற BHEL ஊழியர்களுக்கான உயர் ஓய்வுதியம், (2022) உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் வழங்கபடாமல் காலதாமதம் செய்வதை திருச்சி எம்.பி.  கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
நிர்வாக வசதிக்காக, EPFO Trust விதிகளை மேற்கோள்காட்டி காலதாமதம் செய்வதையும், எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்தியாவின் பல இடங்களில் BHEL factory and office உள்ளது. நிர்வாக வசதிக்காக, major units Trust அமைப்பை, EPFO அங்கிகரித்துள்ளது. இப்பொழுது BHEL Hydreabad மற்றும் PPD(Power project division) உயர் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தியதையும்  கவனத்திற்க்கு கொண்டு வந்தனர்.

இதில் சுமார் 320 நபர்கள் உயர் ஓய்வூதிய திட்டத்திற்கு, EPFO கேட்ட தொகையை, செலுத்திய பிறகும் Trust விதிகளை மேற்கோள்காட்டி அந்த தொகை திருப்பி அளிக்க பட்டது.
உயர் ஓய்வூதிய திட்டத்தில் தங்களது நியாயமன கோரிக்கையை வலியுறுத்தி
காலதாமதம் இல்லாமல் முடித்து கொடுக்க வலியுறுத்தினர்.

இது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்காக அவர்கள் ஏற்கெனவே நீதிமன்றத்தையும் அணுகியுள்ளனர்.

இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்காக, விரைவில் ஒன்றிய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, திருச்சி BHEL ஓய்வு பெற்ற ஊழியர்களின் டிரஸ்டை அங்கீகரித்து உயர் ஓய்வுதியம் ,EPF தொகையை உடனடியாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்வேன் என்று திருச்சி எம்.பி. துரைவைகோ  கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.