மாதிரி கிராமம் கூட்டம்

0 361
Stalin trichy visit

திருச்சி, ஜன.9  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் திருவாசி கிராமத்தில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் மாதிரி கிராமம் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை அலுவலர் தேசிங்குராஜன் வரவேற்பு உரை ஆற்றினார். வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி தலைமை ஏற்று திட்ட விளக்க உரை ஆற்றினார். நடப்பு நிதியாண்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். உதவி விதை அலுவலர் திருக்குமரன் விதை பண்ணை அமைப்பது பற்றி எடுத்துரைத்தார். தோட்டக்கலை அலுவலர் அனிதா துறை சார்ந்த திட்டங்களை எடுத்து கூறினார். வேளாண்மை வணிக உதவி வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரி துறை சார்ந்த திட்டங்களை எடுத்து கூறினார். குமுளூர் வேளாண்மை கல்லூரி முனைவர் விஜய் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி எடுத்துரைத்தார். துனண வேளாண்மை அலுவலர் மருததுரை நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.