முசிறி நகராட்சியுடன் எம்.புதுப்பட்டி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

0 565
Stalin trichy visit

திருச்சி, ஜன. 9  முசிறி நகராட்சியுடன் எம்.புதுப்பட்டி ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம் எம்.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களை முசிறி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முசிறி அருகே உள்ள எம்.புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை முசிறி நகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு தரப்பில் கருத்துரு பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கிராம மக்கள் முசிறி நகராட்சியுடன் எம்.புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை இணைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், மத்திய மாநில, அரசுகளின் திட்டங்கள் தங்களுக்கு கிடைக்காது எனவும் கூறி எம்.புதுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து முசிறி கோட்டாட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளிக்கவும் பொதுமக்கள் திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்து தகவல்அறிந்த முசிறி தாசில்தார் லோகநாதன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் எம்.புதுப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்த
பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கோரிக்கை மனுவை பெற்றார்.

பொதுமக்களின் கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். எம்.புதுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக சுமார் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டதால் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முசிறி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.