2 குழந்தைகளுடன் தாய் மாயம்
திருச்சி ஜூன் 27- திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 44) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.
நேற்று கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அவரது மனைவி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கண்ணன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை போலீசார் தேடி வருகின்றனர்.