மகள் இறந்த துக்கத்தில் உயிரை விட்ட தாய்; சாவிலும் இணைபிரியவில்லை

0 281
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் சக்தி (வயது 49). இவரது கணவர் பெயர் ஜெயராமன். வீட்டிலேயே மாவுமில் வைத்து தொழில் நடத்தி வந்தார். நேற்று காலை மாரடைப்பு காரணமாக சக்தி இறந்ததையடுத்து, நாமக்கல்லில் வசிக்கும் அவரது அம்மா ருக்மணி(வயது 65), அப்பா தங்கராசு ஆகியோர் சக்தியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உப்பிலியபுரம் வந்தனர்.

மகளின் உடலைப் பார்த்து கதறியழுத ருக்மணி, மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயும், மகளும் ஒரே நாளில் இறந்தது, உப்பிலியபுரத்தில் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.