அரசு பெண்கள் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை: முசிறி தொடங்கி வைத்தார்

0 289
Stalin trichy visit

திருச்சி, நவ.8 முசிறி அருகே மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 2.29 கோடி மதிப்பீட்டில் 10 அறைகள் கொண்ட வகுப்பறை கட்டிடம் துவங்க முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மேட்டுப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் சுமார் 650 க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி அரசுக்கு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.29 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்கு மாடி கட்டிடங்கள் கொண்ட பத்து வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது, விழாவில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து மாணவிகளில் எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி சிறப்புரை ஆற்றினார், பள்ளி மாணவிகளுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர், மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் சௌந்தர்ராஜன்,  பொதுப்பணித்துறையினர்,  பள்ளி தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.