மலைக்குறவன் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு முசிறி சார் ஆட்சியரிடம் மனு
திருச்சி, நவ.8 முசிறி பகுதி மலைக்குறவன் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு தமிழ்நாடு மலைவாழ் பழங்குடியினர் அமைப்பின் மாநில தலைவர் முன்னால் எம்எல்ஏ டெல்லி பாபு முசிறி சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
ஜாதி சான்றிதழ் வழங்காவிட்டால் 5000 பழங்குடியினருடன் போராடி சான்று பெறும் நிலை ஏற்படும் என டெல்லி பாபு கூறினார்..
திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மலைக்குறவன் பழங்குடியினர் பல்வேறு கிராமங்களில் வசித்து வருகின்றனர், இவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மலைக்குறவன் பழங்குடியினர் என ஜாதி சான்றிதழ் வேண்டி
முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியாவிடம் மலைக்குறவன் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ டெல்லி பாபு தலைமையில் சங்கத்தின் தலைவர் வீரன், நிர்வாகிகள் சண்முகம், சிவராஜ், அசோக்குமார், நல்லுசாமி உள்ளிட்ட பலர் முன்னிலையில் கோரிக்கை மனுவளித்தனர்,
அந்த கோரிக்கை மனுவில் முசிறி தாலுக்கா மற்றும் தொட்டியம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளான தண்டலை புத்தூர், பொன்னாங்கண்ணி பட்டி, திருத்தலையூர், புலிவலம், முசிறி, ஜம்புநாதபுரம், சித்தாம்பூர், கரிகாலி, தா.பேட்டை, நல்லியம்பட்டி, கரட்டாம்பட்டி, மணியம்பட்டி, தோளூர்பட்டி, காடுவெட்டி, துறையூர் வட்டத்திற்குட்பட்ட துறையூர் அடிவாரம், கீரம்பூர், முத்தியம்பாளையம், காளிப்பட்டி, கா. பாளையம், நாகம நாயக்கன்பட்டி, சேனப்ப நல்லூர், கெம்பியம்பட்டி, சக்கம்பட்டி, மெய்யம்பட்டி, பா .மேட்டூர், வெங்கடாசலபுரம், உப்பிலியபுரம், முருங்கபட்டி, கொப்பம்பட்டி,
வைரி செட்டிபாளையம், ரங்கநாதபுரம், மருவத்தூர், கீரம்பூர்,தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தூர், காடுவெட்டி, தோளூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மலைக்குறவன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்,
மலைகளில் உள்ள மூங்கில்களை வெட்டக்கூடாது என ஆங்கிலேயர் காலத்தில் சட்டம் கொண்டு வந்ததால் இந்த மக்கள் கிராமப்புறங்களில் குடியேறினர்,
இவர்கள் தொழிலாக கூடை பின்னுதல், பன்றி வளர்த்தல் போன்ற நிலையில்லாத தொழில்களை செய்து வாழ்ந்து வரும் நிலையில் இந்த இன மக்களின் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்து படிக்கவும், உயர்கல்வி மற்றும் மேற்படிப்பு செல்லவும், அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும், இனச் சான்று தேவைப்படுகிறது,
இனச் சான்று இல்லாத காரணத்தால் உயர்கல்விக்கு செல்ல முடியாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர், ஒரு சில மலைக்குறவர் இன மக்களுக்கு திருச்சி மாவட்டத்தில் இனச் சான்று வழங்கப்பட்டுள்ளது, மலைக்குறவன் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் இனச் சான்று வழங்கிட வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
இனச் சான்று உரிய காலக்கெடுவிற்குள் வழங்கப்படவில்லை என்றால் மலைக் குறவன் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்,
சம்பந்தப்பட்ட மக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா மனு மீது உரிய விசாரணை செய்து தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.