முசிறியில் தனது பையை தவற விட்டவரிடம் ஒப்படைத்த முசிறி காவல்துறையினர்.

0 451
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி துறையூர் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த சோளம்பட்டி பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவர் தனது மஞ்சள் பையை தவறுதலாக கீழே விழுந்ததை அறியாமல் சென்று விட்டனர். இதனை அவ்வழியே வந்து கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சக்தி விநாயகம் அந்த பையை எடுத்து பார்த்ததில் அதில் உயிர் காக்கும் மருந்துகள், செல்போன், பணத்துடன் கூடிய மணிபர்ஸ் மற்றும் ஆதார் அட்டை உள்ளதை கண்டு அந்த செல்போனில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு தாங்கள் விட்டு சென்ற பை முசிறி காவல் நிலையத்தில் உள்ளது அதனை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியதன் அடிப்படையில் உரிமைக்காரர் காமாட்சி அவரது கணவருடன் வந்து பையைப் பெற்றுக் கொண்டு அதில் அனைத்தும் சரியாக இருப்பதாகவும் மேலும் இதில் முக்கிய மருந்துகள் இருந்தது அதனை எடுத்து கொடுத்த உதவி ஆய்வாளர் சக்தி விநாயகம், ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து பெற்றுச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.