பளூரில் மோட்டார் பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு.

0 326
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

சமயபுரம் அருகே நரசிங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி.இவரதுமகன் 50 வயதான ராமானுஜம் .இவர் பளூர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு செல்வதற்காக சமயபுரத்தில் இருந்து பேருந்து மூலம் பளூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். பின்னர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் 28 வயதான விவேக் ஓட்டி வந்த மோட்டார் பைக் ராமானுஜன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினார். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.