மத்திய அரசைக் கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

0 129
Stalin trichy visit

திருச்சி, ஜன.5 அமைச்சர் கே.என்.நேரு மீது பொய் வழக்கு போட துடிக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செயல்பாட்டை முடக்கும் வகையில் பொய் வழக்கு போட துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும், சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் எனவும், திருப்பரங்குன்றத்தில் இந்து முஸ்லீம் மத மோதலை ஏற்படுத்த துடிக்கும் பாஜகவினரை கண்டித்தும், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில், திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ரபீக் ராஜா, முகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.