பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா : உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

0 123
Stalin trichy visit

திருச்சி, ஜன.5 புதுக்கோட்டை மற்றும் திருச்சி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று திருச்சி வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து  பா.ஜ.க சார்பில் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில்  உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.  அங்கு 1008 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

Leave A Reply

Your email address will not be published.