ஓடும் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் நகையை திருடிய மர்ம நபர்கள் : காவல்துறையினர் விசாரணை

0 120
Stalin trichy visit

திருச்சி, பிப். 3  அரசு பேருந்தில் பெண் பயணி வைத்திருந்த 13 பவுன் நகையை திருடி மர்ம நபர்களை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்

திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயலலிதா (59) இவர் கடந்த 28ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்தவர் தான் அணிந்திருந்த 5 பவுன் செயின், 2பவுன் வளையல் இரண்டும்,  மூணரைப் பவுன் அட்டிகை, அரை பவுன் மோதிரம் என மொத்தம் 13 பவுன் நகையை மணி பர்ஸ்-சில் கழற்றி வைத்து பையில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அரியமங்கலம் பால்பண்ணையில் இருந்து திருவெறும்பூர் செல்லும் அரசு மாநகர் பேருந்தில் வந்த பொழுது காட்டூர் ஆயில் மில் அருகே பையை திறந்து பார்த்த பொழுது பையில் வைத்திருந்த நகை பர்ஸை காணவில்லை இது சம்பந்தமாக ஜெயலலிதா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.