ஓடும் பேருந்தில் பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

0 245
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள லால்குடி பேருந்து நிறுத்தத்தில் நேற்று மதியம் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் தனது பையை சோதனை செய்தபோது பையில் இருந்த நான்கு பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார். போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.

லால்குடி சிறுதையூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் இவருடைய மனைவி 58 வயதான அன்பரசி. இவர் நேற்று மதியம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்வதற்காக அரியலூர் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி உள்ளார்.அப்போது நம்பர் 1 டோல்கேட் லால்குடி பேருந்து நிறுத்தத்தில் வந்தபோது சீட்டில் அமர்ந்து தனது பையை சோதனை செய்த போது அதிலிருந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகியிருந்தது. ஓடும் பேருந்தில் மர்ம நபர்கள் யாரோ நகை பணத்தை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.