வீட்டின் பூட்டை உடைத்து  12 கிராம்  நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

0 234
Stalin trichy visit

திருச்சி, மே 9  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை பாலாஜி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 கிராம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை பாலாஜிநகரைச் சேர்ந்தவர்  காயத்ரி(63) .இவர் இந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 5 ம் தேதி காலை 9.30 மணி அளவில் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதே நாள் இரவு 10 மணி அளவில் காயத்ரி வீட்டை பராமரித்து வரும் முருகானந்தம் என்பவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பெங்களூருக்கு சென்ற காயத்திரிக்கு முருகானந்தம் தகவல் கொடுத்தார் . தகவலறிந்த காயத்ரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு வீட்டில் இருந்த 12 கிராம் நகை திருட்டுப் போனது தெரியவந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் காயத்ரி கொடுத்த புகார் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.