ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரூ.78 லட்சம் உண்டியல் காணிக்கை
திருச்சி, ஜூலை 30 ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூ.78 லட்சம் காணிக்கை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படும். அதன்படி நேற்று எண்ணப்பட்டது. இதில் ரூ.77 லட்சத்து 92 ஆயிரத்து 825-ம், 70.100 மில்லி கிராம் தங்கமும், 625 கிராம் வெள்ளியும், 177 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.