பெருவளப்பூர் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
திருச்சி, ஏப்.2 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் ஊராட்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 26/03/2025 முதல் 01/04/2025 வரை 7 நாட்கள் பெருவளநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது. இதில் தினம்தோறும் கிராமத்தில் பல்வேறு இடங்களில் காலை உழவாரப்பணி நடைபெற்றது. மாலையில் மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. இரண்டாம் நாள் மாலையில் சமுதாயம் முன்னேற்றத்தில் இளைஞர்கள் பங்கு, மூன்றாம் நாள் சமுதாயத்திற்கு முதியோர்களின் தேவையும் அவர்களின் பங்களிப்பு, நான்காம் நாள் போதைப் பொருள் விழிப்புணர்வு, ஐந்தாம் நாள் மனநலம் மற்றும் உடல் நலத்திற்கான யோகாசன பயிற்சி, ஆறாம் நாள் நுகர்வோர் விழிப்புணர்வு போன்ற கருத்தரங்கங்கள் நடைபெற்றன.
நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் T.ஜெயக்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். P.இராமஜெயம், கல்லூரியின் முன்னாள் முதல்வர் (பொ) முனைவர். D.அசோக்குமார், வணிக மேலாண்மை துறை தலைவர் முனைவர் N.சுலைமான் மற்றும் பள்ளி தலைமையாசிரியை சியாமளா கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
விழாவில் நாட்டு நல்ப்பணித்திட்ட அலுவலர் M.சக்திவேல் வரவேற்றார். V.சுகன்யா நன்றி கூறினார். கல்லூரி பேராசிரியர் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.